முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

21-ம் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்கிறது: அமைச்சர்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 10 - ரயில் கட்டணத்தை உயர்த்தி மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் அறிவித்துள்ளார். உயர்த்தப்பட்ட புதிய கட்டணம் வரும் 21 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து அமைச்சர் பவன்குமார் பன்சால் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது, 

ரயில்வே துறையை அனைத்து வகையிலும் நவீனப்படுத்துவது அவசியமானது. மேலும் பல ரயில் திட்டப் பணிகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. பயணிகள் பாதுகாப்புக்காக நவீன கருவிகள் வாங்க வேண்டியுள்ளது. 6 வது சம்பளக் கமிஷனை அமல்படுத்தியதால் ஊழியர்களின் ஊதியம் அதிகரித்து விட்டது.

இதனால் பயணிகள் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கட்டணம் கி.மீ. க்கு 6 பைசாவும், ஏ.சி. சேர் கார் கட்டணம் கி.மீ. க்கு 10 பைசாவும் உயர்த்தப்படுகிறது. உயர்த்தப்பட்ட இந்த புதிய கட்டணம் வரும் 21 ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தவிர புறநகர் ரயில் கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வால் ரயில்வே துறைக்கு ரூ. 12,000 கோடி அதிக வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட்டில் புதிய கட்டண உயர்வு எதுவும் இருக்காது. 

கட்டண உயர்வுக்கு மக்களும் தயாராகி விட்டனர். கடந்த 12 ஆண்டுகளாக பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதை பொது மக்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ள வேண்டும். கட்டண உயர்வு கஷ்டத்தை ஏற்படுத்தும் என்றாலும் அதற்கான யதார்த்த நிலையை உணர்ந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒவ்வொருவரும் கட்டணத்தை உயர்த்த இதுவே சரியான நேரம். தொடர்ந்து சிறந்த சேவையை வழங்க கட்டண உயர்வு தவிர்க்க இயலாத ஒன்றாகும். இவ்வாறு அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார். 

கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் 2 ம் வகுப்பு ரயில் கட்டணத்தை உயர்த்தினார் அப்போதைய ரயில்வே அமைச்சர் திரிவேதி. இதையடுத்து தனது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவரை பதவி விலக வைத்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது. 

மம்தாவின் எதிர்ப்பால் 2 ம் வகுப்புக்கான கட்டண உயர்வு திரும்ப பெறப்பட்டது. ஏ.சி. முதல் வகுப்பு, ஏ.சி. இரண்டாம் வகுப்பு கட்டணம் மட்டுமே உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago