அமெரிக்க ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானியர் 5 பேர் பலி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்
US-Protest

 

பெஷாவர், பிப்.22 - ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 

ஆப்கானிஸ்தான் -பாகிஸ்தான் எல்லையில் தலிபான் தீவிரவாதிகள் மறைந்திருந்து ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. என்றாலும் தலிபான் தீவிரவாதிகளை ஒழிக்க ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அடிக்கடி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. நேற்று பாகிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள காஸாபங்கா என்ற கிராமத்தில் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்க படைகள் ஏவுகணை தாக்குதலை நடத்தின. ஆளில்லாத விமானம் மூலம் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தம் 3 ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் அந்த வீடு பலத்த சேதம் அடைந்தது. 2 பாகிஸ்தானியர்களை அமெரிக்க துப்பாக்கி படையினர் சுட்டுக் கொன்றதற்கு பிறகு நடத்தப்படும் முதல் ஏவுகணை தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை பெஷாவரில் உள்ள பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: