முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேபிசி முன் ஆஜராகுமாறு ஆர்.பி.சிங் - வாகனவதிக்கு சம்மன்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.10 - 2ஜி அலைக் கற்றை புகார் குறித்து விசாரித்து வரும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன் இம்மாதம் 22-ம் தேதி ஆஜராகுமாறு அட்டர்னி ஜெனரல் கூலம் இ.வாகனவதி, மத்திய தலைமை கணக்கு தணிக்கை (சிஏஜி) முன்னாள் அதிகாரி ஆர்.பி.சிங் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக அக்குழுவின் தலைவர் பி.சி.சாக்கோ தெரிவித்தார்.

அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக  நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) அறிக்கை ஏப்ரல் மாத இறுதியில் தயாராகி விடும் என்றும் சாக்கோ தெரிவித்தார். ஜேபிசி முன்பாக இரண்டாவது முறையாக ஆர்.பி.சிங் ஆஜராக உள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஜேபிசி கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் சாக்கோ கூறியது: அலைக்கற்றை விவகாரம் தொடர்பாத பிப்ரவரி 12-ம் தேதிக்குள்  சாட்சிகளிட ம் விசாரணையை முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்குள் 5 கூட்டங்களை நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.அதன் பின்னர் தயாரிக்கப்படும் வரைவு அறிக்கையை இறுதிசெய்ய சுமார் ஒரு மாதம் தேவைப்படும் என்று சாக்கோ கூறினார்.

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எற்பட்ட முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.1,76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு அதிகாரி குறிப்பிட்டிருந்தார். ஆனால் அலைக்கற்றை ஒதுக்கீட்டால் அரசுக்கு ரூ.2645 கோடி மட்டுமே இழப்பு ஏற்பட்டது. சிலரின் வற்புறுத்தலால் அந்த இழப்பு ரூ.1.76 லட்சம் கோடி என்று மாற்றப்பட்ட கோப்பில் கையெழுத்திட்டேன் என்று சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பு ஏற்படுக்கினார் ஆர்.பி.சிங்.

  கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி நடைபெற்ற ஜேபிசி கூட்டத்தில் ஆஜரானபோதும் ஆர்.பி.சிங் அதையே கூறினார். இந்த நிலையில் குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் மீண்டும் ஆர்.பி.சிங்கை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  அதை ஏற்று அவருக்கு மீண்டும் சம்மன்  அனுப்பப்பட்டுள்ளது.  அலைக்கற்றை ஒதுக்கீட்டுத் தொகையை மத்திய  தொலைத்தொடர்புத் துறை நிர்ணயித்த விவகாரம் குறித்து

அட்டர்னி ஜெனரல் வாகனவதியை அழைக்க கடந்த அக்டோபர் மாதம் 3-ம் தேதி முடிவு செய்யப்பட்டது.

அதற்கு ஜெபிசி குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.  அதை சாக்கோ நிராகரித்தார்.

இதையடுத்து குழுவிலிருந்து விலகுவதாக மிரட்டல் விடுத்த பாஜக உறுப்பினர்கள் மூன்று கூட்டங்களைப் புறக்கணித்தனர். மக்களவைத் தலைவர் மீரா குமார் தலையிட்டு சமரசம் செய்ததையடுத்து நேற்று முன் தினம் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்