முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுவராஜ் சிங் அபாய மான பேட்ஸ்மேன்: பீட்டர்சன்

புதன்கிழமை, 9 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன. 10 - இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் யுவராஜ் சிங் அபாயமான பேட்ஸ்மே ன் என்று இங்கிலாந்து அணியின் நட்சத் திர வீரரான கெவின் பீட்டர்சன் தெரிவி த்து இருக்கிறார். தலைநகர் டெல்லியில் நிருபர்களைச் சந்தித்த இங்கிலாந்து அணியின் முன்ன ணி வீரரான பீட்டர்சன் அவர்களது கே ள்விக்கு பதில் அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். 

இங்கிலாந்து அணி கேப்டன் அலிஸ் டார் குக் தலைமையில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளை யாடி வருகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நட க்க இருக்கிறது. 

இதன் முதல் போட்டி ராஜ்காட் நகரில் வரும் வெள்ளிக் கிழமை துவங்க இருக் கிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றன. 

இந்தத் தொடர் துவங்குவதற்கு முன் பாக இங்கிலாந்து அணி தற்போது பயி ற்சி ஆட்டத்தில் பங்கேற்று வருகிறது. 

இங்கிலாந்து அணி முதலில் 4 போட்டி கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் வெற்றி பெற்ற பிற கு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்த அணி நா டு திரும்பியது. 

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடக்க இருக்கும் ஒரு நாள் தொடரில் யுவராஜ் சிங் அபாயமான வீரராக இருப்பார் என்றும் கெவின் கருத்து தெரிவித்து இருக்கிறார். 

2011 -ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி வெற்றி பெ ற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்ப ற் றியது. இறுயில் யுவராஜ் சிங் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இதற்கு முன்பாக நடந்த ஒரு நாள் தொடரில் இங்கிலாந்தின் சுழற் பந்து வீச் சாளர்கள் 4 முறை யுவராஜ் சிங்கை ஆட்டம் இழக்க வைத்துள்ளனர். 

இருந்த போதிலும், சிங் இங்கிலாந்து பெளலர்களுக்கு கடும் சவாலை அளிப் பார் என்றும் இங்கிலாந்து அணியின் மூத்த வீரரான பீட்டர்சன் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஆனால் பஞ்சாப் வீரரான யுவராஜ்சிங் தற்போது நல்ல பார்மில் இல்லை. பா கிஸ்தானிற்கு எதிரான தொடரில் அவர் டி - 20 யில் 72 ரன் எடுத்தார். 

இதனால் இந்திய அணி இரண்டாவது டி- 20 யில் வெற்றி பெற்று தொடரை சமனாக்கியது. ஆனால் பாக். அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் யுவராஜ் சிங், கோக்லி , காம்பீர் மற்றும் சேவா க் போன்ற வீரர்கள் எதிர்பார்த்த அளவி ற்கு பேட்டிங் செய்ய வில்லை. 

எனவே இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியாவின் முன்ன ணி வீரர்களான காம்பீர், கோக்லி மற் றும் யுவராஜ் சிங் ஆகியோர் சிறப்பாக ஆடி ரன் எடுக்க வேண்டிய கட்டாயத் தில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago