முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ரூ.49 கோடியை யாரும் உரிமை கோரவில்லை- பிரவீண்குமார் தகவல்

திங்கட்கிழமை, 18 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 18 - தமிழகத்தில் தேர்தலின்போது நடத்தப்பட்ட வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.54 கோடியில் ரூ.5 கோடி மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி திரும்ப பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகை ரூ.49 கோடிக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என பிரவீண்குமார் கூறினார்.​
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கை எடுத்தது. வாகனங்களில் பணம் கொண்டு போவதை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டன. பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் மூலமும் திடீரென சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த அதிரடி சோதனையின்போது, வாகனங்களில் கொண்டு போகப்பட்ட பணம் கட்டுக்கட்டாக பிடிபட்டது. வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக சிலர் கொண்டு சென்ற பணமும் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்டன.தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழ்நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் 54 கோடியே 17 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.29 கோடியே 87 லட்சம் ரூபாயை பறக்கும் படை கைப்பற்றியது. ரூ.15 கோடியே 6 லட்சம் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் சிக்கியது. ரூ.9 கோடியே 24 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தேர்தல் கமிஷன் நடவடிக்கைமூலம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தில் ரூ.5 கோடி மட்டும் உரிய ஆவணங்களை காட்டி அதன் உரிமையாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர்.மொத்தம் பறிமுதல் ஆன ரூ.54.17 கோடியில் ரூ.49.17 கோடியை வாங்கிச் செல்வதற்காக இதுவரை யாரும் வரவில்லை.
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியான ஆவணங்களை காட்டி ரூ. 5 கோடியை மட்டும் தேர்தலுக்கு முன்பு சிலர் திரும்ப பெற்றுள்ளனர். அதன் பிறகு இதுவரை யாரும் மீதம் உள்ள பணத்தை திருப்பி வாங்க வரவில்லை. இவை கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணமாக இருக்கலாம். வருமான வரி செலுத்தியதற்கான ஆவணம் மற்றும் ஆதராம் இருப்பவர்கள் பணத்தை திரும்ப பெறலாம் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள்
பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு முகப்பரு குணமாக | தழும்புகள், கரும்புள்ளி, பாலுண்ணி நீங்க | மருவு கரப்பான் பிளவை தீர சித்த மருத்துவ குறிப்புக்கள் மூட்டு வலி குணமாக | Natural Home Remedy for Knee & Hip Joint Pain | Arthritis