ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்
russia

 

மாஸ்கோ, பிப். 22 - ரஷ்யாவின் கிழக்கு கடலோர பகுதியில் நேற்று பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 6.2 ஆக பதிவாகி இருந்தது. 

இந்திய நேரப்படி நேற்று காலை 9.43 மணிக்கு  இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு தெருக்களுக்கு ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கத்தினால் எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை என்று பேரிடர் மேலாண்மை துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்த நில நடுக்கம் உஸ்த்-காம்சட்ஸ்க் பகுதிகளுக்கு இடையில்  ஏற்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: