முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது ஒரு நாள்: இந்தியா 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஜன. 16 - இங்கிலாந்து அணிக்கு எதிராக கொச்சி யில் நடைபெற்ற 2 -வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 127 ரன் வித் தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக் கில் சமானாகியுள்ளது. 

இந்தப் போட்டியில் இந்திய அணி தரப் பில், கேப்டன் தோனி, ஜடேஜா  மற்று ம் ரெய்னா ஆகியோர் அரை சதம் அடி த்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்த னர். கோக்லி, யுவராஜ் சிங் ஆகியோர் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். 

பின்பு பெளலிங்கின் போது, புவனேஷ் வர் குமார் மற்றும் அஸ்வின் இருவரும் இணைந்து 6 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினர். அவர்களுக்கு ஆதரவாக ஜடேஜா, மற்றும் ஷமி அகமது ஆகி யோர் பந்து வீசினர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 2-வது போட்டி கொச்சியில் உள்ள நேரு அரங்கத்தில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் கை தேர்வு செய்தது. இந்திய அணி தரப் பில் காம்பீர் மற்றும் ரகானே இருவ ரும் ஆட்டத்தை துவக்கினர். 

இந்திய அணி இறுதியில் நிர்ணயிக்கப் பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற் கு 285 ரன்னை எடுத்தது. இந்திய அணி தரப்பில், 3 வீரர்கள் அரை சதம் அடித் தனர். 

கேப்டன் தோனி அதிரடியாக ஆடி 66 பந்தில் 72 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். ஆல்ரவு ண்டர் ஜடேஜா 37 பந்தில் 61 ரன் எடுத் தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ச ர் அடக்கம். தவிர, ரெய்னா 78 பந்தில் 55 ரன்னையும், விராட் கோக்லி 37 ரன் னையும், யுவராஜ்சிங் 32 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், வேகப் பந்து வீச்சாளர் பின் 51 ரன்னைக் கொடுத் து 2 விக்கெட் எடுத்தார். டெர்ன்பேச் 73 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, வோக்ஸ் மற்றும் டிரட்வெ ல் தலா 1 விக்கெட் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 286 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை இந்திய அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 36 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 158 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2-வது போட்டியில் இந்திய அணி 127 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் 1 - 1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது. 

இங்கிலாந்து அணி தரப்பில், பீட்டர்சன் அதிகபட்சமாக, 44 பந்தில் 42 ரன் எடுத் தார். இதில் 7 பவுண்டரி அடக்கம். தவி ர, ரூட் 50 பந்தில் 36 ரன்னையும், சமித் படேல் 30 ரன்னையும், கேப்டன் குக் 17 ரன்னையும், கீஸ்வெட்டர் 18 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், புவனேஷ்வர் குமார் 29 ரன்னைக் கொடுத்து 3 விக்கெ ட் எடுத்தார். அஸ்வின் 39 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, ஜடேஜா 2 விக்கெட்டும் ஷமி அகமது 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்