சங்கரராமன் கொலை வழக்கு: ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
1818pdy9 (Sankara Raman)

புதுச்சேரி, ஏப்.- 19 - சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ராமசாமி முன்னிலையில் நடந்து வருகிறது.
நேற்று நடைபெற்ற சாட்சிகள் விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜேஷ், தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் காசி ஆகிய 2 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது.
சாட்சிகளிடம் அரசு தரப்பு வக்கீல் தேவதாஸ் விசாரணை நடத்தினார். ஜெயேந்திரர் தரப்பு வக்கீல் செந்தில்நாராயணன் குறுக்கு விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜூன் 6-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி ராமசாமி உத்தரவிட்டார். நேற்று நடைபெற்ற சாட்சிகள் விசாரணையின் போது ரகு உள்பட 4 பேர் ஆஜரானார்கள். ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட 20 பேர் ஆஜராகவில்லை.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: