முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலிதா ஜியா மீதான ஊழல்: விசாரிக்க கோர்ட் அனுமதி

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      ஊழல்
Image Unavailable

 

டாக்கா, ஜன. 17 - வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா மீதான ஊழல் புகார் குறித்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரான காலிதா ஜியா பிரதமர் பதவி வகித்த போது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி தமது அறக்கட்டளை ஒன்றுக்கு கணக்கில் காட்டாமல் அந்நிய செலாவணி மதிப்பில் 3.25 கோடி டாக்கா திரட்டினார் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையம் 2011 ம் ஆண்டு ஆகஸ்ட் 8 ம் தேதி காலிதா ஜியா மற்றும் 2 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக 2012 ம் ஆண்டு பிப்ரவரி 2 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான காலிதா ஜியா அப்போது ஜாமீன் பெற்றார். இதை தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக கூறி விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார் என நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தலைமறைவாகி உள்ள ஹாரிஸ் சவுத்ரியை கைது செய்யவும், மெட்ரோபாலிடன் செசன்ஸ் நீதிபதி ஜஹிருல்ஹேக் உத்தரவு பிறப்பித்தார். சவுத்ரியின் தனி துணை செயலர் ஜியாவுல் இஸ்லாம் முன்னாள் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக்ஹூசேன், கோக்காவின் முன்னாள் தனி உதவியாளர் மோனிருல் இஸ்லாம்கான் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்ற இருவர் ஆவர். 

இவர்கள் ஏற்கனவே ஜாமீன் பெற்றுள்ளனர். ஜியா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால் அவருக்கு அதிகபட்சம் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். மேலும் எதிர்காலத்தில் அவர் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது. வங்கதேசத்தில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்ட போது ஆட்சியில் அமர்ந்த இடைக்கால அரசால் ஜியா மீது பல ஊழல் வழக்குகள் போடப்பட்டன. அதில் காலிதா ஜியாவின் அறக்கட்டளை தொடர்புடைய ஊழல் வழக்குதான் முதலில் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்