காவிரி உத்தரவை அரசிதழில் வெளியிடக் கூடாதாம்!

புதன்கிழமை, 16 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 17  - காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கை டெல்லியில் சந்தித்து முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவகவுடா வலியுறுத்தினார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது, 

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து அரை மணி நேரம் பேசினேன். நடப்பு ஆண்டு மே மாதம் இறுதி வரை கர்நாடகத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் என தெரிகிறது. இதே நேரத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிட்டால் கர்நாடகத்துக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளையும் பிரதமரிடம் எடுத்துரைத்தேன். 

2007 ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடக் கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். எனது பேச்சை பிரதமர் அமைதியுடன் கேட்டார் என்று தேவகவுடா கூறினார். 

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக கர்நாடக அரசின் நிலையை தெரிவிக்க ஒரு வார காலமாகும் என்று கர்நாடக அரசு காவிரி கண்காணிப்பு குழுவிடம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கண்காணிப்பு குழுவிடம் கர்நாடகம் அளித்துள்ள கடிதத்தில், மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் மாநில அளவில் கர்நாடக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசு தனது பதிலை அளிக்க ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளதாக மத்திய நீர் வளத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 10 ம் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை அரசிதழில் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் கருத்து கேட்டார். 

தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அரசிதழில் உத்தரவை வெளியிட ஆதரவு தெரிவித்தன. ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக அரசின் தலைமை செயலர் ரங்கநாத் மட்டும் இது குறித்து கர்நாடக முதல்வரிடம் ஆலோசித்து இரண்டு நாட்களில் தங்களது முடிவை தெரிவிப்பதாக கூறியது குறிப்பிடத்தக்கது.

Annai Akilandeswari Thiru Kovil Varalaaru | அன்னை அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் வரலாறு | #Akilandeswari

Health mix for babies | Mixed Nuts Powder | Protein powder for kids

Egg Malai Masala | Easy step by step recipe

Chicken Chukka Chettinad Style | How to make Chicken Curry | செட்டினாட் சிக்கன் சுக்கா

Easy Wheat Biscuit recipe | Crispy & Crunchy Snacks | Ladies Glitz

Chicken 65 recipe | Authentic Indian recipes | Ladies Glitz

Vegetable Cutlet | Crunchy & Crispy Recipe by Ladies Glitz

Chocolate Milkshake | Banana Milkshake | Easy & yummy tasting milkshake recipes

Easy art & craft using Egg shells & Newspaper | Art from waste material to useful | Home decor ideas

Chapathi Veg Roll | Kids Veg Wrap | Ladies Glitz

Easy idli podi recipe | Idli milagai podi in tamil | இட்லி பொடி | Milagai podi recipe

Snack ideas for children | கடலைமாவு முட்டை ஆம்லெட் | Everyday snacks recipe -1

Ghee at home | Homemade Pure Ghee in Tamil | 100% சுத்தமான நெய் - வீட்டிலேயே தயாரிப்பது எப்படி

இதை ஷேர் செய்திடுங்கள்: