பஹ்ரைனில் வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் வரவேற்பு

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      உலகம்
Bahrain

 

மணாமா,பிப்.22 - ஒரு வார காலமாக மன்னராட்சிக்கு எதிராக கொந்தளிப்பில் இருந்து வரும் வளைகுடா நாடான பஹ்ரைனில் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

ஆப்பிரிக்க கண்டத்தின் வட பகுதியில் உள்ள துனிசியா, எகிப்து நாடுகளை தொடர்ந்து ஆட்சி மாற்றம் எனும் அலை அரேபிய வளைகுடாவின் கரையை தொட்டது. இதில் பாதிக்கப்பட்ட முதல் நாடு பஹ்ரைன். மன்னராட்சி நடந்து வரும் இங்கு கடந்த ஒரு வார காலமாக அதிகாரத்தில் பங்கு கேட்டு நாடு தழுவிய போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் இதுவரை 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

இங்கு முழு கதவடைப்பு நடத்த ஆட்சி எதிர்ப்பாளர்களும், தொழிலாளர் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு அந்நாட்டில் அதிகளவில் மக்கள் வரவேற்பு இருந்தது என்று காட்டும் விதமாக எல்லா பணிகளும் முடங்கியது. ஆனால் அரசு நடத்தி வரும் விமான சேவை மட்டும் முடங்காமல் இயங்கியது. ஆனால் பஹ்ரைனில் ஆட்சி நடத்தி வரும் ராஜகுடும்பத்தினர் பேச்சுவார்த்தைக்கு இன்னும் தயாராகவில்லை. 

துனிசியா, எகிப்தை தொடர்ந்து லிபியாவில் கடாபியின் ஆட்சிக்கு எதிராக எழுந்த கிளர்ச்சி தொடர்ந்து 5 வது நாளாக நீடிக்கிறது. இங்கு மக்களின் எதிர்ப்பு பெரும்பாலும் லிபியாவின் கிழக்கு பகுதியில் மட்டும் காணப்படுகிறது. லிபிய கலவரத்தில் இதுவரை 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யேமன் நாட்டில் நடந்து வரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: