முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3-வது ஒரு நாள் போட்டி: இந்திய அணி அபார வெற்றி

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

ராஞ்சி, ஜன. 20 - இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஞ்சி யில் நடைபெற்ற 3 - வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2- 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் முன்னதாக இந்தி ய அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப் பந்து வீச்சாளர்கள் இணைந்து சிறப்பாக பந்து வீசி இங்கி லாந்து அணியை குறைந்த ரன்னில் சுருட்டினர். 

பின்பு பேட்டிங்கின் போது விராட் கோக்லி அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு பக்க பலமாக காம்பீர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் ஆடினர். 

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையேயான 3 -வது ஒரு நாள் போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் எச்.இ.சி. சர் வதேச கிரிக்கெட் அரங்க வளாகத்தில் பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெ ற்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி தரப்பில் கே ப்டன் குக் மற்றும் பெல் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

ஆனால் முதலில் களம் இறங்கிய இங் கிலாந்து அணி ரன் எடுக்க திணறியது. இறுதியில் அந்த அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 155 ரன்னில் சுருண்டது. 

இங்கிலாந்து அணி வீரர்களில் ஒருவரு ம் அரை சதத்தை எட்டவில்லை. ஜோ ரூட் அதிகபட்சமாக, 57 பந்தில் 39 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, இயான் பெல் 25 ரன்னையும், பிரஸ்னன் 25 ரன்னையும், கேப்டன் குக் மற்றும் பீட்டர்சன் தலா 17 ரன்னையும், மார்கன் 10 ரன்னையும் எடுத்தனர். 

இந்திய அணி சார்பில், ஜடேஜா 19 ரன் னைக் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி னார். தவிர, இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், ஷமி அகமது மற்றும் ரெ ய்னா ஆகியோர் தலா 1 விக்கெட் எடு த்தனர்.  

156 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற எளிய இலக்கை இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வைத்தது. அடுத்து களம் இறங்கிய இந்திய அணி 28.1 ஓவ ரில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 3 -வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ரில் 2 -1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங்கில் கோக் லி மீண்டும் பார்முக்கு திரும்பியது ரசி கர்களுக்கும், அணிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கோக்லி ஒரு முனையில் இறுதிவரை நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். அவர் 79 பந்தில் 77 ரன் னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழ க்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். 

துவக்க வீரர் காம்பீர் 53 பந்தில் 33 ரன் எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். யுவராஜ் சிங் 21 பந்தில் 30 ரன் எடுத் தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். இந் திய அணியின் வெற்றி ஷாட்டை அடி த்த கேப்டன் தோனி 10 ரன்னுடன் கள த்தில் இருந்தார். 

இங்கிலாந்து அணி சார்பில், டிரட் வெ ல் 29 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். பின் 50 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக கோக்லி தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்