முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாக்., நேரடி பேச்சுவார்த்தை நடத்த வரவேற்பு

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜன.20- எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் ஏற்பட்டுள்ள பதட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இந்தியா-பாகிஸ்தான் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதை அமெரிக்கா வரவேற்றுள்ளது. 

இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோட்டை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதால் பதட்டம் உருவாகி உள்ளது. இந்த பதட்டத்தை தணிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் விடுத்த அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது. அவசரக்கோலத்தில் இந்த பேச்சுவார்த்தையை நடத்த முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துவிட்டார். 

இந்தநிலையில் எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துவதை நல்லது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நுலந்து நேற்றுமுன்தினம் வாஷிங்டன்னில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். இந்தியா-பாகிஸ்தான் இடையே பொருளாதாரம், விசா வழங்குதல், வர்த்தகம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரித்து வருவதை நாங்கள் மனதார மதித்து ஆதரிக்கிறோம். இது கெட்டுவிட்டால் இருநாடுகளுக்கும் பயன் அளிக்காது. தெற்காசியா பிராந்தியத்தில் நாங்கள் மிகவும் கவனமாக இருக்கிறோம் என்று விக்டோரியா நுலந்து மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்