முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்., பிரதமருக்கு எதிரான வழக்கை விசாரித்தவர் தற்கொலை

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      ஊழல்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 20 - பாகிஸ்தான் பிரதமர் ராஜா பர்வேஸ் அஸ்ரப் மீதான ஊழல் வழக்கை விசாரித்து வந்த என்.ஏ.பி. துணை இயக்குனர் கம்ரான் பைசல் தற்கொலை செய்து கொண்டார். மின் திட்டங்களில் பர்வேஸ் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கை ஊழலுக்கு எதிரான அமைப்பான என்.ஏ.பி விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. என்.ஏ.பி.யை சேர்ந்த இரு அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் தங்கியிருந்த பைசல் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். முதற்கட்ட விசாரணையில் பிரதமர் தொடர்பான வழக்கை விசாரித்து வந்ததினால் மன அழுத்தம் அதிகரித்து பைசல் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் பைசல் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்று தெரியவரும் என்று இஸ்லாமாபாத் துணை போலீஸ் அதிகாரி யாமின் தெரிவித்தார். 

முன்னதாக மின் திட்ட ஊழல் வழக்கில் பிரதமர் மற்றும் இருபதுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்ய என்.ஏ.பி.வுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பிரதமரை கைது செய்வதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என என்.ஏ.பி. தலைவவ் பாஸி பொகரி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்