முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபராக ஒபாமா மீண்டும் பதவியேற்றார்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன. - 21 - அமெரிக்காவின் அதிபராக 2 வது முறையாக பராக் ஒபாமா நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

அமெரிக்காவின் அரசியல் சாசனப்படி 20 ம் தேதியன்று அதிபராக ஒபாமா பதவியேற்க வேண்டும். ஆனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதனால் நேற்று அரசியல் அமைப்புக்காக ஒருமுறை பதவியேற்ற ஒபாமா, இன்று மீண்டும் பொதுமக்களின் முன்னிலையில் பதவி ஏற்க உள்ளார். இந்த இரண்டு பதவியேற்புகளின் போதும் ஆப்ரகாம் லிங்கன் மற்றும் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் பயன்படுத்திய பைபிள்களை ஒபாமா பயன்படுத்துகிறார். அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ராபர்ட்ஸ், ஒபாமாவுக்கு 2 முறையும் பதவியேற்பு செய்து வைக்கிறார். இதற்கு முன்னரும், அமெரிக்க அதிபர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட டுவைட் ்சன் ஹோவர், ரொனால்ட் ரீகன் ஆகியோர் இதேபோல் 2 முறை பதவி ஏற்றனர். இன்றைய பதவியேற்புக்குப் பிறகு அவர் ஆற்ற இருக்கும் உரை மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்