முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணுஉலை மின்சாரத்தை ஆதரிப்பது ஏன்? அப்துல்கலாம் விளக்கம்

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,ஜன.- 21 - ராமநாதபுரத்தில் நடைபெற்ற தனியார் ஆஸ்பத்திரி விழா ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசிய அப்துல்கலாம், அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில், நான் விளக்காக இருப்பேன், நான் படகாக இருப்பேன், நான் ஏணியாக இருப்பேன், அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன், அதன் மூலம் மனநிறைவோடு வாழ்வேன் என்று கூறி இந்த வரிகளை அனைவரையும் கூறும்படி கூறினார். இதன்பின்னர் பேசிய அவர், மகாத்மா காந்திக்கு 7வயது இருக்கும்போது அவரின் தாய், மகனே, உன் வாழ்க்கையில் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து அவரின் வாழ்வில் ஏதேனும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும், நீ மனிதனாக பிறந்த பலனை அடைந்து விடுவாய் என்று அறிவுரை கூறினார். அதேபோல, நீங்கள் அனைவரும் அடுத்தவரின் துன்பத்தை துடைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஒருவருக்கு துன்பம் நேரும்போது அவருக்கு துணையாக இருப்பதைபோல உதவி உலகில் வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனும், தன்வாழ்வில் பெரிய லட்சியம், அறிவை தேடி பெறுதல், கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகிய நான்கையும் கடைப்பிடித்து வாழ்ந்தால் வெற்றி பெறுவது நிச்சயம் என்று அறிவுரை கூறினார். இதன்பின்னர், அப்துல்கலாமிடம் அங்கிருந்த சிறுவர்-சிறுமிகள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-  கேள்வி:- ஒட்டுமொத்தமாக அனைவரும் அணு உலை மின்சாரத்திற்கு எதிராக போராடி வரும்போது நீங்கள் மட்டும் ஆதரிப்பது ஏன்? பதில்:- உலகிலேயே நீர் மின்சாரம், அணுமின்சாரம் இந்த இரண்டில் மட்டும்தான் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லை. மற்றவற்றில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் உள்ளது. நாமும், வருங்கால சந்ததியும் மாசு இல்லாத பூமியில் வாழ அணு மின்சாரமே சிறந்தது.

கேள்வி:- இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களால் கொல்லப்பட்டது பற்றி உங்கள் கருத்து?

பதில்:- மனித சமுதாயம் மனித சமுதாயமாகவே நடந்துகொள்ள வேண்டும். அதில் இருந்து யாரும் தவறக்கூடாது.

கேள்வி:- ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் சேர்ந்து மீண்டும் உங்களை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தினால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்:- நான் ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். அதில் அதிகமனநிறைவு அடைகிறேன். அதனையே தொடர்ந்து பெற விரும்புகிறேன். மீண்டும் ஜனாதிபதியாக விரும்பவில்லை. இவ்வாறு பதில் கூறினார். 

nullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnullnull..

படம்:- விழாவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பேசியபோது எடுத்தபடம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony