மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா நேபாளம் செல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
SM Krishna

புதுடெல்லி, ஏப்.20 - மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக இன்று நேபாளம் செல்கிறார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று மூன்று நாள் பயணமாக நேபாளத்திற்கு செல்கிறார். நேபாளத்தில் அரசியல் முட்டுக்கட்டை நிலவிவரும் சூழ்நிலையில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். நேபாளத்தில் தற்போது ஜலானாத் கனால் அரசு பதவி வகித்து வருகிறது. இந்த அரசின் தோழமை அமைப்பு என்று சொல்லப்படும் மாவோயிஸ்ட்டுகள் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபட்டு வரும் நிலையில் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று நேபாளம் செல்கிறார். அங்கு அந்நாட்டின் அதிபர் மற்றும் பிரதமரை அவர் சந்தித்து பேசுகிறார். மேலும் தேராய் சாலை திட்டத்திற்கும் எஸ்.எம்.கிருஷ்ணா அடிக்கல் நாட்டுகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்கிறார். மத்திய  அமைச்சராக பதவியேற்ற பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா நேபாளம் செல்வது இது இரண்டாவது முறையாகும். நேபாள பிரதமராக கனால் பதவியேற்ற பிறகு எஸ்.எம்.கிருஷ்ணா அங்கு செல்வது இது முதல்முறையாகும். இரு நாடுகள் இடையேயான பாரம்பரிய உறவை வளர்க்க இந்த பயணம் உதவும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: