முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கை தக்கவைப்போம்: ஒபாமா

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன். ஜன. - 23 - அமெரிக்காவின் அதிபராக 2-வது முறை பதவியேற்றுக் கொண்ட பராக் ஒபாமா, தமது நாட்டின் செல்வாக்கை சர்வதேச அளவில் தொடர்ந்து தக்க வைப்போம் என்று சூளுரைத்துள்ளார். அமெரிக்க அதிபராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட ஒபாமா லட்சக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில், அமெரிக்கா எதிர்கொண்ட பல்வேறு நெருக்கடிகள் சோதனைக்குள்ளாக்கியிருதன. ஆனால் தற்போது அமெரிக்காவின் எதிர்காலம் எல்லைகளற்று விரிவடைந்து போயுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான நீடித்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைகளில் சரியான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அமெரிக்காவில் குடியேறுபவர்கள், இந்த நாடு வாய்ப்புக்களை வழங்கும் நாடு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மாணவர்கள், பொறியியலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லாமல் உள் நாட்டிலேயே பணிபுரிய வேண்டும். அமெரிக்காவின் கடன் மற்றும் பற்றாக்குறை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் கடுமையான முடிவுகளைப் பின்பற்றியாக வேண்டும். எமது பயணம் முடிந்து போய்விடவில்லை...உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஜனநாயகம் வலுப்பட அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளும். அமெரிக்காவின் வலிமையை அதிகரிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உலக அளவில் அமெரிக்கா தமது செல்வாக்கை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும். ஆயுத வலிமை மற்றும் சட்டப்படியான ஆட்சி மூலம் அமெரிக்காவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்றார் அவர்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்