முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் பார்லிமெண்ட் தேர்தல் - பிரதமர் நெதன்யாகு கட்சிமீண்டும் ஆட்சி அமைக்கிறது?

செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

ஜெருசலம். ஜன - 23 - ஈ்ரான் மற்றும் பாலஸ்தீனத்துடனான மோதல் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலில் இன்று பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலிலும் தற்போதைய பிரதமர் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசு அமையக் கூடும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ்ரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்கிறது என்று குற்றம்சாட்டி போர் முஸ்தீபுகளில் முனைப்பு காட்டியது இஸ்ரேல். இதேபோல் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை காசா பகுதிகளில் உக்கிரமான தாக்குதலை நடத்தி பலநூறு பாலஸ்தீனர்கலை படுகொலை செய்திருந்தது இஸ்ரேல். இவை அனைத்துமே இஸ்ரேலின் பொதுத் தேர்தலை மையப்படுத்திய நடவடிக்கைகள் என்று கூறப்பட்டு வந்தது. அந்த பொதுத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது. மொத்தம் 120 இடங்களுக்கான இந்தத் தேர்தலில் 38 அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. தற்போதைய தேர்தலிலும் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. நெதன்யாகு தலைமையிலான அரசு மீண்டும் அமைந்தால் ்ரானுடனான மோதல் போக்கும் பாலஸ்தீனத்துடனான யுத்த நடவடிக்கைகயும் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவே கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago