முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு?

புதன்கிழமை, 23 ஜனவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன. 24 - இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈ்டுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப் போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு விட்டன. 

தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டு விட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

யாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டு விட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு, செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிரவர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்