முக்கிய செய்திகள்

ரூபாயின் மதிப்பு சரிவு

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
IndianRupee 0

மும்பை, ஏப்.20 - டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு திங்கள்கிழமை கடும் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக ஒரு டாலரை வாங்க ரூ.44.45 தரவேண்டியிருந்தது. முன்பு ஒரு டாலருக்கு ரூ.44.33 தந்தால் போதுமானதாக இருந்தது. வங்கிகள் மிக அதிக அளவில் டாலர்களை வாங்கியதும், ஏற்றுமதியாளர்கள் டாலர்களை அதிகம் வாங்கியதும் ரூபாயின் மதிப்பு சரிந்ததற்கு பிரதான காரணங்களாக கூறப்பட்டன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததும், ஆசிய பங்குச்சந்தை வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்ற, இறக்கமும் ரூபாயின் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை உருவாக காரணமாகியது.

இதை ஷேர் செய்திடுங்கள்: