முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணை ராணுவ பாதுகாப்பு - ஜெயலலிதா வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.20 - ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் போது துணை ராணுவப்படை பாதுகாப்பு ஏற்பாடு செய்ய ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-​ 

அடுத்த மாதம் 13​ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய நேர்மையாக ஓட்டு எண்ணிக்கை நடக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனை கேட்டுக் கொள்கிறேன். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவப் படையினரை நிறுத்தவேண்டும். ஓட்டு எண்ணிக்கை தொடங்கி முடிவை தேர்தல் அதிகாரிகள் அறிவிக்கும் வரை துணை ராணுவ பாதுகாப்பு இருக்க வேண்டும். இதன் மூலம் சட்டம்​ ஒழுங்கு காப்பாற்றப் படவேண்டும். உரிய அடையாள அட்டை இல்லாமல் யார் ஓட்டு எண்ணும் இடத்துக்குள் நுழைந்தாலும் அவர்களை துணை ராணுவம் மூலம் தடுக்க வேண்டும். தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட தேர்தல் மேற்பார்வையாளர் முன்னிலையில்தான் ஓட்டு எண்ணிக்கை நடக்க வேண் டும். எண்ணிக்கை தொடங்கு வதில் இருந்து முடிவு அறிவிக்கும் வரை அவர் அங்கேயே இருக்கவேண்டும். ஓட்டு எந்திரங்களில் சீல்களை அகற்றுவதில் இருந்து ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை அனைத்தையும் வீடியோ மூலம் படம் பிடிக்க வேண்டும். இதன் மூலம் முறைகேடுகளை தடுக்க முடி யும். ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கையையும் வேட்பாளர்கள் முன்னிலையில் நோட்டீசு போர்டுகளில் எழுத வேண்டும். அதன் பிறகுதான் அடுத்த சுற்று ஓட்டு எண்ணிக்கை நடக்க வேண்டும். அப்போதுதான் ஓட்டு எண்ணிக்கை வெளிப் படையாக இருக்கும். எனது கோரிக்கைகளை அவசரமாக கருதி தேவை யான உத்தரவுகளை பிறப் பிக்கும்படி தேர்தல் கமிஷனை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயலலிதா கடிதத்தில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்