முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு விமான நிலைய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, ஏப்.20 -  ஜம்மு விமான நிலைய விரிவாக்கத்திற்கும் நவீனப்படுத்துதலுக்கும் மத்திய அரசு ரூ.70 கோடியை ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்போதுள்ள வசதிகளை நவீனப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விமானங்கள் தரையிறங்கும் நிலப்பரப்பை அதிகரிக்கவும் அதிகமான பயணிகளை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.விமான நிலைய கட்டிடங்கள் மற்றும் வளாகங்களை விரிவாக்கம் செய்து நவீனமயமான வசதிகளை ஏற்படுத்தித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

இதற்காக மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்டதில் தற்போது ரூ.70 கோடியை மத்திய அரசு அனுமதித்துள்ளதாக காஷ்மீர் மாநில  வருவாய்த்துறை அமைச்சர் பாமண் பாலா தெரிவித்தார்.

ஜம்முவில் உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு இந்த தகவலை அவர் தெரிவித்தார்.

இந்த விரிவாக்க திட்டத்தின் காரணமாக விமான நிலையத்திற்கு அருகே வசிக்கும் சில குடும்பங்கள் வேறு இடத்திற்கு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களை இடம் மாற்ற தேவையான மாற்று இடம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்