முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அரசு மன்னிப்பு கேட்க நெடுமாறன் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.20 - இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு துணை போன இந்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

அரசு அறிவித்த பாதுகாப்பு வளைய பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தியது, செஞ்சிலுவை கப்பல் மீது தாக்குதல் நடத்தியது என்பது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு சுமத்தியுள்ளது. 

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் இருந்து ராஜபக்சேவை காப்பாற்றியதன் மூலம் அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது. 

இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால் ராஜபக்சேவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. இப்போது உலக அரங்கில் ராஜபக்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமாகி உள்ளது. இனியாவது தனது கடந்த காலத் தவறுகளுக்கு இந்திய அரசு மன்னிப்பு கேட்பதுடன் ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முன்வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்