முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா மும்பை ஐகோர்ட்டில் அப்பீல்

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

 

மும்பை,ஏப்.20 - வீட்டு வேலைக்காரியை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற பிரபல பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா நேற்று தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

நடிகர் ஷைனி அகுஜா தாக்கல் செய்த இந்த மனு நேற்று விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு வரும் 27 ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நீதிபதி ஏ.ஆர். ஜோஷி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார். முன்னதாக, பாலிவுட் நடிகர் ஷைனி அகுஜா தான் தாக்கல் செய்திருந்த அப்பீல் மனுவில் கீழ்கோர்ட் தனக்கு தண்டனை அளிக்கும் போது தவறு இழைத்து விட்டதாகவும், தான் இந்த வழக்கில் தவறான முறையில் சிக்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, இந்த வழக்கை விசாரித்த விரைவு நீதிமன்றம் ஷைனி அகுஜாவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது பாதிக்கப்பட்ட அந்த பெண் பல்டியடித்து வாக்குமூலம் அளித்த நிலையிலும் கூட சந்தர்ப்ப சாட்சியங்களின் அடிப்படையில் கீழ்கோர்ட் அவ்வாறு தீர்ப்பு கூறியது. ஆனாலும் அச்சுறுத்தல், தவறான முறையில் அடைத்து வைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளில் இருந்து நடிகர் அகுஜா விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவருக்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்தே தற்போது ஷைனி அகுஜா மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்