முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய முதல்வர் சவான் இடைத்தேர்தலில் போட்டி

செவ்வாய்க்கிழமை, 19 ஏப்ரல் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஏப்.20 - மகராஷ்டிர மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் வரும் மே மாதம் 4 ம் தேதி அம்மாநிலத்தில் நடைபெறும் மேல்சபைக்கான இடைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் போட்டியிடுவதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று அனுமதி அளித்தார். 

மகராஷ்டிர மாநில முதல்வராக இருந்தவர் அசோக் சவான். இவர் ஆதர்ஷ் வீட்டு வசதி திட்ட ஊழலில் சிக்கியதை அடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இம்மாநிலத்தின் புதிய முதல்வராக பிருத்விராஜ் சவான் நியமிக்கப்பட்டார். 

ஆனால் புதிய முதல்வர் பிருத்விராஜ் சவான் மகராஷ்டிர மாநிலத்தின் இரு சபைகளிலுமே உறுப்பினராக இல்லை. அதாவது, மேல்சபையிலும் சரி, கீழ்சபையிலும் சரி இவர் உறுப்பினராக இல்லை. முதல்வராக பதவியேற்கும் ஒருவர், தான் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது விதி. இதையடுத்து பிருத்விராஜ் சவான் போட்டியிடுவதற்கு வசதியாக பிரபல நடிகர் சஞ்சய்தத், தனது மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். 

ஆனால் இவரது பதவிக்காலம் 2016 ம் ஆண்டு ஜூலை 7 ல் தான் முடிவுக்கு வருகிறது. பிருத்விராஜ் சவான் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வசதியாக சஞ்சய்தத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து வெற்றிடமாக உள்ள அந்த இடத்துக்கு வரும் மே மாதம் 4 ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அந்த இடத்தில் முதல்வர் பிருத்விராஜ் சவான் போட்டியிடுகிறார். அதற்கு சோனியாவும் அனுமதி அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்