முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஸ்வரூபம் படத்தை வெளியிட கோரிக்கை

திங்கட்கிழமை, 28 ஜனவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.28 - அகில இந்திய மக்கள் நலப்பேரவை, அகில இந்திய அறிவொளி கல்வி அறக்கட்டளை, தாமரை சமூக தொண்டு நிறுவனம் ஆகிய பெண்கள் அமைப்புகள் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விஸ்வரூபம் படத்துக்கு ஆதரவு தெரிவித்து நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. 

அதில் கூறி இருப்பதாவது:-​

நடிகர் கமலஹாசன் பத்மஸ்ரீ விருது பெற்றவர். முஸ்லிம்களை சகோதரர்களாக நினைப்பவர். ஆனால் சில முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பால் விஸ்வரூபம் படம் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த படத்தை திரையிட போலீசார் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த அமைப்புகளின் சார்பில் புகார் கொடுக்க வந்திருந்த டாக்டர் சுஜாதா கூறியதாவது:-​

விஸ்வரூபம் படத்தை கமல் ரூ.90 கோடி செலவில் எடுத்துள்ளார். சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. கமலஹாசன் ஒரு தலை சிறந்த நடிகர். எனவே அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்