முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.20 - வைகை ஆற்றுக்குள் உள்ள தேனூர் மண்டபத்தில் அழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளித்தார். ராமராயர் மண்டபத்தில் விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெற்றது.உலக பிரசித்தி பெற்ற அழகர் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. லடசக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து அழகர் பெருமான் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தங்கினார். இங்கு இரவு முழுவதும் பக்தர்கள் அழகரை தரிசித்தனர். நேற்று காலை 5 மணிக்கு திருமஞ்சனமான அழகர் ஏகாந்த சேவையில் உலா வந்தார். 8 மணிக்கு சேஷ வாகனத்தில் வண்டியூரில் இருந்து புறப்பட்ட அழகர் காலை 10 மணிக்கு வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் கருட வாகனத்தில் எழுந்தருளிய அழகர் மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளித்து விட்டு வைகை ஆற்றை விட்டு புறப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசித்தனர்.

    அங்கிருந்து புறப்பட்ட அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளிவிட்டு மாலை அனுமார் கோவிலுக்கு வந்தார். அங்கு அங்க பிரதட்சனம் நடைபெற்றது. நேற்று இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார். இங்கு விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெற்றது. முதலில் முத்தங்கி சேவை, மச்சவதாரம், கூர்மாவதாரம்,  வாமன அவதாரம், ராமஅவதாரம், கிருஷ்ண அவதாரம் ஆகிய அவதாரங்களில் தோன்றினார். அதிகாலை மோகனாவதாரத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.  பின்னர் மோகனவதாரத்தில் ராமராயர் மண்டபத்தில் இருந்து புறப்பட்ட அழகர் அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி மண்டகப்படிகளுக்கு செல்கிறார். இரவு 11 மணிக்கு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்திற்கு திருமஞ்சனமாகிறார். நாளை(வியாழன்) அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். இதைதொடர்ந்து அழகர் மலை நோக்கி புறப்படுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago