முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட் போவதாக இல்லை: கமல் அறிவிப்பு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

சென்னை, பிப். 1 - என் திரையுலக நண்பர்கள் அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட் செல்ல மாட்டேன் என்று நடிகர் கமலஹாசன் கூறி உள்ளார்.  விஸ்வரூபம் இந்திப் பட வெளியீட்டுக்காக மும்பை செல்லும் போது, சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார் நடிகர் கமலஹாசனிடம், இன்றே சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்வீர்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கமல், என் நண்பர்கள் சிலர் அரசுடன் பேசி வருகின்றனர். நம்பிக்கை வார்த்தைகளைத் தந்துள்ளனர். எனவே நான் இப்போதைக்கு சுப்ரீம் கோர்ட் செல்லும் முடிவைத் தள்ளி வைத்துள்ளேன். அரசின் முடிவுக்காக பிப்ரவரி 6 ம் தேதி வரை காத்திருக்க முடிவு செய்துள்ளேன். இப்போது விஸ்வரூபம் இந்தி மற்றும் தமிழை வட இந்தியாவில் வெளியிடும் வேலைகளைக் கவனிக்க வேண்டியுள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்