முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷாருக்கானுக்கு பாதுகாப்பு: பாக்., அமைச்சருக்கு கண்டனம்

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, பிப். 1 - பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்திய அரசு பாதுகாப்பளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்ததற்கு மத்திய அரசு மற்றும் எதிர்கட்சிகள் கூட்டாக கண்டனம் தெரிவித்துள்ளன. 

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இந்திய அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கைக்கு மத்திய அரசு, எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து பல்வேறு தலைவர்களின் கருத்து, மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் ஆர்.கே. சிங் கூறுகையில், 

எங்கள் நாட்டு குடிமக்களை பாதுகாக்க எங்களால் முடியும். அவர்கள்(பாகிஸ்தான்) அதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஷித் அல்வி, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மாலிக் தலையிடக் கூடாது. பாகிஸ்தான் அதன் மக்களைப் பற்றி தான் கவலைப்பட வேண்டும். பாகிஸ்தானில் என்ன நடக்கிறது என்று நமக்கெல்லாம் தெரியும். பாகிஸ்தான் கலைஞர்கள் இங்கு வந்தபோது கூட அவர்களுக்கு நாம் பாதுகாப்பு அளித்தோம். இந்தியாவில் முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர். மாலிக் தெரிவித்ததற்கு ஷாருக் என்ன கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு இந்தியரைப் பற்றி பேச பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்றார். 

பா.ஜ.க. தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், இந்தியாவின் விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும். எங்கள் குடிமக்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். பாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள சிறுபான்மையினர் பற்றி கவலைப்படட்டும். இந்தியாவில் உள்ளவர்களைப் பற்றி அல்ல. இது மதச்சார்பற்ற நாடு என்றார். சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் ஷாஹித் சித்திக் கூறுகையில், அவுட்லுக் பத்திரிக்கையில் ஷாருக்கான் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். கானாக இருப்பதால் அவர் சந்தித்த பிரச்சனைகள் குறித்து தெரிவித்துள்ளார். அவரின் தந்தை பாகிஸ்தானை விட்டு விட்டு இந்தியாவுக்கு வந்தவர். ஷாருக்கின் பாதுகாப்பே அவரது ரசிகர்கள் தான். ரஹ்மான் மாலிக்கின் கருத்தை கண்டிக்கிறேன். ஷாருக்கானை அனைத்து இந்தியர்களும் மதிக்க வேண்டும். அவரைப் போன்றவர்கள் தான் இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதை நிரூபிக்கிறார்கள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்