முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமல் குறித்த கடிதம்: கருணாநிதி மீது அவதூறு வழக்கு

வியாழக்கிழமை, 31 ஜனவரி 2013      சினிமா
Image Unavailable

 

சென்னை, பிப்.1 - கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்கு நான் கடிதம் எழுதியதாக கூறும் கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடுக்க முடிவு செய்துள்ளேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.   சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதாவது:- 

விஸ்வரூபம் பட   பிரச்சினையை கருணாநிதி உள்ளிட்ட சில அரசியல் கட்சியினரும் மீடியாக்களும் பெரிதுப்படுத்தி என் மீதும், அரசின் மீதும் தேவையற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன என்று முதலமைச்சர் தெரிவித்தார்.ஜெயா டிவிக்கு திரைப்படம் தராததால் தடை விதித்ததாகவும் சிலர் பேசி வருகின்றனர். எனக்கும் அந்த டிவிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த டிவியை நடத்துபவர்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள. அது என்னுடைய டி.வி.யோ, கட்சி டி.வி.யோ இல்லை. அதன் நிர்வாகத்திலும் நான் தலையிடுவதில்லை. ஆனால் இதற்காக நான் தடை விதித்ததாக தவறான தேவையற்ற, முறையற்ற பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் நான் சட்டரீதியாகத்தான் நடவடிக்கை எடுப்பேன். ஒரு விழாவில் பேசிய கமல்ஹாசன், வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக வருவார் என்று பேசியதற்காக இந்த படத்திற்கு நான் தடை விதித்தேன் என்றும் கருணாநிதி உள்பட சிலர் தேவையற்ற விமர்சனத்தை செய்துள்ளனர்.  கமல்ஹாசன் தன்னுடைய கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமை உண்டு. அந்த வகையில்தான் அவர் பேசியிருக்கிறார்.

30 ஆண்டுகளுக்கும் மேல் அரசியலுக்கு உள்ள எனக்கு அனைத்து விவரங்களும் தெரியும். கமல்ஹாசனுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உள்ளதா? 100 கோடிக்கும் மேல் உள்ள  மக்கள் எடுக்க வேண்டிய முடிவு அது. இதற்காக நான் எப்படி அவருக்கு எதிராக செயல்பட்டேன் என்று பேசுகிறார்களோ தெரியவில்லை.

மேலும் 1980-களில் நான் கமல்ஹாசன் குறித்து எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதியதாகவும் மிகத் தவறான குற்றச்சாட்டை கருணாநிதி சொல்லியிருக்கிறார். 80-களில் நான் அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராகவும் எம்.பி.யாகவும் இருந்துள்ளேன். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரை தினமும் நான் சந்திப்பேன். பலமுறை மாம்பலம் அலுவலகத்தில் எம்.ஜி.ஆரை சந்தித்து கட்சிக்காரர்களுடைய மனு, பொது மக்கள் அளித்த மனுக்கள் தொடர்பாக பேசுவோம்.

அப்படி தினமும் நான் எம்.ஜி.ஆரை சந்தித்தநேரத்தில் எப்படி கடிதம் எழுதியிருப்பேன். இது குறித்து சட்ட ரீதியாக கருணாநிதி மீது அவதூறு வழக்கு தொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்