முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்துடன் நல்லுறவுக்கு முன்னுரிமை - எஸ்.எம்.கிருஷ்ணா

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

காட்மாண்டு, ஏப்.21 - நேபாளத்துடனான நல்லுறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளித்துவருகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 3 நாள் பயணமாக நேபாளம் சென்றார். அவருடன் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் உட்பட 7 நபர்களைக் கொண்ட குழு ஒன்றும் நேபாளம் சென்றுள்ளது. நேபாளம் சென்ற எஸ்.எம்.கிருஷ்ணாவையும் அவருடன் சென்ற குழுவினரையும் நேபாள துணைப் பிரதமரும், நிதியமைச்சருமான பாரத்மோகன் அதிகாரி வரவேற்றார். திரிபுவன சர்வதேச  விமான நிலையத்தில் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, நேபாளத்துடனான நல்லுறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார். நேபாளத்தில் தற்போது அரசியில் முட்டுக்கட்டை நிலவிவருகிறது. இதனால் அமைதிப் பணிகளில் முன்னேற்றம் தடைப்பட்டுள்ளது. நேபாளத்தின் பொருளாதார முன்னேற்றம், மற்றும் ஜனநாயகம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்த நேபாள மக்களுடன் இணைந்து பாடுபட இந்தியா உறுதிபூண்டிருப்பதாகவும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். நேபாளத்தின் வளர்ச்சிக்கு நாங்களும் பங்களிப்போம். பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தவே நாங்கள் வந்திருக்கிறோம் என்றும் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். நேபாளத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட இந்தியா பாடுபடும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் அந்நாட்டு தலைவர்களை எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார். எஸ்.எம்.கிருஷ்ணாவின் பயணத்தை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago