முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக அத்லடிக் சங்க செயலாளர் நீலசிவலிங்கசாமி மரணம்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.21 - தமிழ்நாடு அத்லடிக் சங்க செயலாளரும், அகில இந்திய அத்லடிக் சம்மேளன பொருளாளருமான சி.நீலசிவலிங்கசாமி நேற்று காலமானார். தமிழ்நாடு அத்லடிக் சங்க செயலாளர் சி.நீnullலசிவலிங்கசாமி (வயது 55). இவரது வீடு நாகர்கோவில் வடசேரி டிஸ்லரி ரோட்டில் உள்ளது. கடந்த 17​ந் தேதி வீட்டில் இருந்தபோது அவர் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூளைக்கு செல்லும் ரத்த குழாய் வெடித்து ரத்த கசிவு ஏற்பட்டதை கண்டு பிடித்தனர். அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தாலும் ரத்த கசிவு நிற்காமல் தொடர்ந்ததையடுத்து அவர் கோமா நிலையிலேயே இருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 2.15 மணிக்கு இறந்தார். nullநீலசிவலிங்கசாமி உடல் திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இன்று (21ம் தேதி) காலை 7 மணிக்கு மணிக்கட்டி பொட்டலில் உள்ள குடும்ப கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் நடக்கிறது. nullநீலசிவலிங்கசாமி தமிழ்நாடு அத்லடிக் சங்க செயலாளராக தொடர்ந்து 6-வது முறையாக பதவி வகித்து வந்தார். இந்திய அத்லடிக் சம்மேளன பொருளாளராகவும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க இணை செயலாளராகவும் பணி புரிந்து வந்தார். தமிழ்நாட்டில் பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச அத்லடிக் போட்டிகள் நடைபெற நீnullலசிவலிங்கசாமி முக்கிய பங்கு வகித்தார். தேசிய அளவில் தமிழக வீரர்​வீராங்கனைகள் பதக்கங்களை குவிக்க இவரது செயல்பாடு முக்கியமாக இருந்தது. 

முன்னாள் அத்லடிக் வீரரான இவர் 800 மீட்டர், 1500மீட்டர், 5 ஆயிரம் மீட்டர், 10 ஆயிரம்மீட்டர் ஓட்டம் மற்றும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸ் பந்தயங்களில் பங்கேற்று தேசிய அளவில் பதக்கம் பெற்றவர். நீnullலசிவலிங்கசாமிக்கு ஜெயந்தி என்ற மனைவியும், இந்துஜா, சிந்துஜா என்ற 2 மகள்களும் உள்ளனர்.

நீலசிவலிங்கசாமியின் மறைவுக்கு தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் பா.சிவந்தி ஆதித்தன், செயலாளர் கே.முருகன், தமிழ்நாடு அத்லடிக் சங்க தலைவர் தேவாரம்,  துணை தலைவர் டி.கே.ராஜேந்திரன், பொருளாளர் ஈஸ்வர்ராவ்,  இணை செயலாளர் லதா,  தமிழ்நாடு எறிபந்து சங்க தலைவர் சி.சைலேந்திரபாபு, செயலாளர் டி.பாலவினாயகம், பொருளாளர் ஜே.பி.சுகுமார் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு சங்கங்களின் பிரதிநிதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்