முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வழக்கு விசாரணையில் குறட்டைவிட்டு தூங்கிய ரஷ்ய ஜட்ஜ்....ராஜினாமா!

ஞாயிற்றுக்கிழமை, 3 பெப்ரவரி 2013      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, ஜன. - 4 - மாஸ்கோ: வழக்கு விசாரணையின் போது எதிர்கட்சிக்காரரின் வாதத்தை கேட்காமல் தூங்கி வழிந்த ஜட்ஜ் ஒருவர் கடுமையான விமர்சனத்திற்குப் பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பிளாகோவேஷ்சென்ஸ்க் கோர்ட்டில் நீதிபதியாக உள்ளவர் யெவ்கெனி மக்னோ. கடந்த ஜுலை மாதம் இவர் நீதிபதியாக பணியாற்றும் நீதிமன்றத்தில் நடந்த பொருளாதார குற்றம் தொடர்பான வழக்கு ஒன்றில், குற்றம் சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞர் காரசாரமாக வாதாடிக்கொண்டிருந்தார். அவரின் வாதத்தை பதிவு செய்துக்கொள்ள வேண்டிய நீதிபதியோ, தனது இருக்கையில் சொகுசாக அமர்ந்து குறட்டைவிட்டு உறங்கிக் விட்டார். பின்னர் அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி சமீபத்தில் அந்த நீதிபதி தீர்ப்பளித்தார். அந்த வழக்கை நீதிபதி விசாரித்த லட்சணம் குறித்து அவர் குறட்டை விட்ட வீடியோ காட்சிகளுடன் ஒரு இணையதள பத்திரிகை விமர்சித்து இருந்தது. இந்த வீடியோவை பார்த்த நீதிமன்ற ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீதிபதி யெவ்கெனி மக்னோவை ராஜினாமா செய்யும்படி அறிவுறுத்தினர். இதனையடுத்து, தலைமை நீதிபதியிடம் அவர் தனது ராஜினாமா கடிதத்தை நேற்று வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago