முக்கிய செய்திகள்

பீகாரில் பஞ்சாயத்து தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடந்தது

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
Bihar-Map

 

பாட்னா, ஏப்.21 - பீகார் மாநிலத்தில் முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல்கள் நேற்று பலத்த பாதுகாப்புடனும் அமைதியுடனும் நடந்தது.பீகார் மாநிலத்தில் பல கட்டங்களாக பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

முதல் கட்டமாக 37 மாவட்டங்களில் 28,639 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. கிராம பஞ்சாயத்து, பேரூராட்சி, மாவட்ட பஞ்சாயத்து உள்ளிட்ட பல அமைப்புகளுக்கான இந்த தேர்தலில் 12,905 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டளிக்க வந்தனர். ஆண்களும், பெண்களும் நீண்ட் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த தேர்தலில் மொத்தம் 1.43 லட்சம் பேர் போட்டியில் உள்ளனர்.

இந்த தேர்தல் பலத்த பாதுகாப்புடன் அமைதியான முறையில் நடைபெற்றதாக மாநில போலீஸ் டி.ஜி.பி.  நீல்மணி தெரிவித்தார்.

ஒரு வாக்குச்சாவடியில் ஒரு குழந்தையை பாதுகாப்பு படையினர் அடித்ததால் பிராக் என்ற  பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அதிகாரியின் வாகனத்தை உள்ளூர் மக்கள் தாக்கினர். இதில் அந்த அதிகாரி ஜா காயமின்றி தப்பினார். என்றாலும் 2  போலீசார் படுகாயம் அடைந்தனர். மற்றபடி வேறு எந்த பகுதியிலும் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: