முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரும்புபயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகள்

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப்.- 5 - கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழு உறுப்பினர்களுக்கு நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (4.2.2013) தலைமைச் செயலகத்தில், கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழு புதிய சர்க்கரை ஆலைகளுக்கு உரிய கரும்பு பயிரிடும் பகுதிகளை ஒதுக்கீடு செய்வதற்கும், ஏற்கெனவே இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பயிரிடும் பகுதிகளைத் தேவைக்கேற்ப மாற்றங்கள் செய்வதற்காகவும் அமைக்கப்பட்டது.  இந்த கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக்குழுவில், விவசாய பிரதிநிதி உறுப்பினர்களாக கோயம்புத்தூர் மாவட்டம், ஆதிமாதையனூர் செல்வராஜ், தஞ்சாவூர்  தங்கமுத்து மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்,  வேட்டவலம்  க.  மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  கரும்பு பயிரிடும் பகுதி ஒதுக்கீட்டுக் குழு உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட செல்வராஜ்,  தங்கமுத்து மற்றும்  வேட்டவலம்  க.மணிகண்டன் ஆகியோருக்கு தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் அதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்