முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒசூர்அருகே ரயில்மோதி 2 காட்டு யானைகள் பலி

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ஒசூர் பிப். - 5 - ஒசூர் அருகே ஊடே துர்க்கம் காப்பு காடு பகுதியில் பாசஞ்சர் ரயில் மோதியதில் 2 காட்டு யானைகள் பலியானது. 5 யானைகள் படுகாயமடைந்து காட்டுக்குள் சென்றுவிட்டது.  தருமபுரியிலிருந்து கர்நாடக மாநிலம் சிக்கபல்லாயூருக்கு தினசரி 5  மணிக்கு  பாசஞ்சார் இயக்கப்படுகிறது. இந்த பாசஞ்சர் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, ராயக்கோட்டை. ஊடேதுர்க்கம் காப்பு காடு பகுதி வழியாக கர்நாடக மாநிலத்திற்கு செல்கிறது. இந்த பகுதி வனப்பகுதி என்பதாலும் இங்கு விலங்குகள் நடமாட்டம் இருக்கும் என்பதாலும் எப்போது இந்த மெதுவாகவும் எச்சரிக்கையாகவும் இரயிலை டிரைவர்கள் இயக்குவது வழக்கம் நேற்று அதிகாலை வழக்கம் போல் இரயில் தருமபுரியில் இருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தது இந்த ரயில் ராயக்கோட்டையை அடுத்த உள்ளுகுறுக்கை கிராமம் முத்தப்பன் கோவில் அருகேயுள்ள வளைவில் திரும்பியது அப்போது கடும் பனி மூட்டமாக இருந்துள்ளது. அங்கு சுமார் 35 காட்டுயானைகள் இரயில் தண்டவாளத்தை கடந்துள்ளது. இதில் 5 வயதில் ஒரு யானையும் 2 வயதான குட்டியானை ஒன்றும் இரயில் மோதியதில் படுகாயமடைந்து இறந்தது. இதில் ஒரு யானை சுமார் 100 மீட்டர் தூரத்தில் இரயில் எஞ்சின் இழுந்து சென்றது.  இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு குர்ணப்பள்ளி மாவட்ட வன அலுவலர் உலகநாதன் வனவர் செளவுந்தர்ராஜன் ஆகியோர் தலைமையில் வனத்துறையை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். 

அந்த பகுதியில் ஆய்வு வனத்துறையினர் இந்த ரயிலில் மேலும் 5 யானைகள் படுகாயமடைந்து காட்டுக்குள் சென்றுள்ளதாக தெரிவித்தனர். வழி நெடுகிலும் இரத்தம் சிந்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  யானைகளுக்கு  தேவையான உணவு கிடைக்காததாலும் தண்ணீர் குடிப்பதற்கும் யானைக்கூட்டம் இது போன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து தோட்டங்களை நாசம் செய்வதாகவும் நேற்று பனி மூட்டத்தின் காரணமாக தூரத்தில் யானைக்கூட்டம் இருப்பது தெரியாததால் டிரைவர் இரயிலை நிறுத்தமுடியாமல் போயிருக்கலாம் என்றும் டிரைவர் ரயிலை மெதுவாக இயக்கியதால் இரயில் கவிழவில்லை என்றும் கூறப்படுகிறது.  மேலும் இதே போன்று கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் 31 ம் தேதி இதே பகுதியில் இரயில் மோதிய விபத்தில் 5 யானைகள் சம்பவ இடத்திலேயே பலியானது என்பது குறிப்பிடத்தக்கது.  பயணிகளை யானைகள் திருப்பி வந்து தாக்ககூடும் என்பதால் தேன்கனிக்கோட்டை கூடுதல் கண்காணிப்பாளர் விஜய்குமார் தலைமையில் ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், உத்தனப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழு வரவழைக்கப்பட்டு யானைகளை அங்கேயே பிரேதபரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே புதைக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்