மக்கள் குறைதீர்க்கும் நாளில் அன்சுல்மிஸ்ரா பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

மதுரை, பிப். - 5 - மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (04.02.2013) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்சுல்மிஸ்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆட்சியர் அலுவலக கர்னல்.ஜான் பென்னிகுயிக் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித்தொகை வேண்டி மனு கொடுக்க வந்திருந்த மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை நேரில் சென்று பார்த்து அவர்களிடம் மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பெற்றுக் கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் ஆவனியாபுரத்தை சேர்ந்த திரு.சோமசுந்தரம், திரு.அய்யனார், திரு.பாரதி ஆகியோருக்கு தலா ரூ.4245 வீதம் ரூ.12,735 மதிப்பிலான இலவச தேய்ப்பு பெட்டிகளையும், உலமா நலவாரியத்தின் மூலம் 12 பயனாளிகளுக்கு உலமாக்களுக்கான அடையாள அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மேலும், வடக்கு வட்டத்தைச் சேர்ந்த 41 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், ஒருவருக்கு முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். அடையாள அட்டையின்றி வந்த மாற்றுத்திறனாளிகளை மருத்துவக்குழு பரிசோதித்து 41 மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் மற்றும் மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்டஇயக்குநர் திரு.அருண்சுந்தர்தயாளன்,இ.ஆ.ப., மதுரை வருவாய் கோட்டாட்சியர் திரு.ஆறுமுகம், தனித்துணை ஆட்சியர் (சமூகப்பாதுகாப்புத்திட்டம்) திரு.ஆறுமுகநயினார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சி.செல்வராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.காமாட்சிகணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் திரு.ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.மதிவாணன், மதுரை வடக்கு வட்டாட்சியர் திருமதி.பாலலெட்சுமி, வருவாய் ஆய்வாளர் திருமதி.பானுமூர்த்தி உள்ளிட்ட வருவாய்த்துறை, வளர்;ச்சித்துறையைச் சார்ந்த அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: