பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள்மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும்

திங்கட்கிழமை, 4 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம்,பிப்.- 5 - ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலதாமதமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.  ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து- 197 மனுக்கள் பெறப்பட்டது. தமிழக முதல்வரிடம் வேலைவாய்ப்பு கேட்டல், விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மருத்துவ உதவி வேண்டுதல், முதியோர் உதவித்தொகை, பயிர்க் காப்பீடு கேட்டல், கர்ப்பிணி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாறுதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், இலவச தையல் இயந்திரம் கோருதல், விதவைப் பெண்கள் உதவித்தொகை, வங்கிக்கடன், கல்விக்கடன் கோருதல், உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்துக் கொடுத்து 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதில் அளிக்க கலெக்டர் நந்தகுமார் உத்தரவிட்டார். தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள்மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, காலதாமதமின்றி அந்த அந்த வாரங்களில் வரும் மனுக்கள்மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில்; வேளாண் இணை இயக்குநர் சக்திமோகன், வேளாண்மை பொறியல்துறை செயற்பொறியாளர் யுவராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் இளங்கோவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவர் மணிமேகலை மற்றும்அரசு உயர் அலுவலர்கள்; உட்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: