முக்கிய செய்திகள்

திசை திருப்பும் நடவடிக்கையில் மாயாவதி - சமாஜ்வாடி

Maayawait

 

லக்னோ, ஏப்.21 - மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளதை மூடி மறைக்கவும், மக்களின் கவனத்தை வேறு திசையில் திருப்பவும் மாயாவதி கண்துடைப்பு நாடகங்களை நடத்தி வருவதாக சமாஜ்வாடி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.சமாஜ்வாடி கட்சி தலைவர்களில் ஒருவரான சிவ்பால்சிங் யாதவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில்,  உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்திருப்பதை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்புவதற்காக மாயாவதி அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை கூட்டங்களை நடத்தி கண் துடைப்பு நாடகங்களை நடத்தி வருகிறார் என்றார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் அதிகாரிகளுக்கு ஒரு பிக்னிக் போல நடத்தப்பட்டுள்ளது. எனவே இந்த ஆலோசனை கூட்டங்களில் எந்த பலனும் இல்லை.  இந்த கூட்டங்களினால் ஏற்பட்ட பலன்கள் குறித்து மாயாவதி அரசு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய  வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

உ.பி.யில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது.  அரசு அதிகாரிகளே படுகொலை செய்யப்படுகிறார்கள். உ.பி.யில் லஞ்ச லாவண்யம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: