முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியன் லீக்: மும்பை இந்தியன்சுக்கு டெண்டுல்கர் கேப்டன்

செவ்வாய்க்கிழமை, 5 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப். 6 - இந்தியன் பிரீமியர் லீக்கின் 6 -வது போட்டியில் இந்திய அணியின் நட்சத் திர வீரரான சச்சின் டெண்டுல்கர் மும் பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் கே ப்டனாகிறார். ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க் மும்பை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபட்டது. அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. 

இந்திய அணியின் மூத்த சுழற் பந்து வீச் சாளரான ஹர்பஜன் சிங் மும்பை அணிக்கு கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டி யில் தலைமை தாங்கியது நினைவு கூறத்தக்கது. 

பஞ்சாப் வீரரான ஹர்பஜன்சிங் சாம்பி யன்ஸ் லீக் டி - 20 போட்டியில் மும் பை அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆனால் ஐ.பி.எல். - 5 போட்டியில் அவரால் மும்பை அணியை வெற்றிகர மாக நடத்த முடியவில்லை. 

கடந்த ஐ.பி.எல். - 5 போட்டியில் மும் பை அணி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் சென்னை சூப் பர் கிங்சிடம் தோல்வி அடைந்து இறு திச் சுற்று வாய்ப்பை பறிகொடுத்தது. 

டெண்டுல்கர் கடந்த வருடம் பேட்டிங் கில் கவனம் செலுத்த விரும்பினார். எனவே மும்பை அணியின் கேப்டன்  பொறுப்பை ஹர்பஜனிடம் ஒப்படை த்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்ற போதிலும் ஒரு முறை கூட பட்டம் வெல்லவில்லை. எனவே அந்த அணிக்கு மைக்கேல் கிளார்க் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. 

இந்திய அணியின் முன்னணி வீரரான டெண்டுல்கர் டெஸ்ட் மற்றும் ஒரு நா ள் போட்டிகளில் பல சாதனைகளை படைத்து இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் அதிக ரன் குவித் து இருக்கிறார். 

இரு பிரிவிலும் அதிக சதம் அடித்து இருக்கிறார். மொத்தம் 100 சதம் அடித் தும் சாதனை படைத்து இருக்கிறார். இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்து இருக்கிறார். 

எனவே சமீபத்தில் ஒரு நாள் போட்டி யில் இருந்து ஓய்வு பெற்ற டெண்டுல் கர் மும்பை அணிக்கு ஐ.பி.எல். கோப் பையை வென்று கொடுக்க விரும்புகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்