முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தக்காளி கிலோ ஒரு ரூபாய் - விவசாயிகள் கவலை

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

நத்தம்,ஏப்.21 - நத்தம் பகுதியில் தக்காளி விளைச்சல் அமோகமானதைத் தொடர்ந்து ஒரு கிலோ ஒரு ரூபாய்க்கு குறைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் விவசாயிகள் கத்தறி, வெண்டி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை விளைவித்து இதன்மூலம் தங்கள் வாழ்வுக்கு ஆதாரம் தேடிவருகிறார்கள். இந்தநிலையில் இதனை சாகுபடி செய்வதற்கு அவர்கள் தண்ணீர், உரம், விதை போன்றவற்றிற்கு  பெரும் பணம் செலவு செய்ய வேண்டி யுள்ளது. ஆனால் காய்கறிகளின் விலை பெரும் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் செலவு செய்த பணத்தைக்கூட எடுக்கமுடியாமல் அல்லாடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தற்போது கடந்த 10 நாட்களாக தக்காளி சாகுபடி அதன் உச்சநிலையை எட்டியுள்ளது. இதனால் விளைச்சல் அதிகமானதால் பழத்தின் விலை ஒரு ரூபாய்க்கு கீழ் வந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கூடை தக்காளி ரூ.15 முதல் ரூ.20 வரைதான் போகிறது. இது குறித்து அப்பகுதி விவசாயி ஒரு வர் கூறுகையில், பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களான கோடைகாலத்தில் தக்காளி விளைச்சல் அமோகமாவதைத்தொடர்ந்து விலை வீழ்ச்சி அடையத்தான் செய்யும் ஆனால் இந்த வரும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விலை சரிந்தது விவசாயிகளை பாதித்துள்ளது. தக்காளி பழம் பிடுங்கி சேர்ப்பதற்கு ஆட்கள் கிடைக்காமலும் கூலி அதிகம் கொடுக்க வேண்டி இருப்பதாலும் இது விவசாயிகளுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது.அப்படியே பழத்தை பறித்தாலும் ஏற்றுகூலி, இறக்கு கூலி மற்றும் போக்குவரத்து செலவு என்று எங்களை திக்குமுக்காடச் செய்து விடுகிறது. தற்போதைய நிலவரப்படி தக்காளி சாகுபடியாளர்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் நிலையில் உள்ளது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்