முக்கிய செய்திகள்

கர்நாடகத்தில் ராகுல்காந்தி

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
rahul-gandhi1

ஹூப்ளி, ஏப்.21 - அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் ராகுல்காந்தி நேற்று தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாக வந்துசேர்ந்தார். அவரை மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பரமேஸ்வர், சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்கள் சித்தராமையா, மோத்தம்மா மற்றும் பலரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். பிஜபூருக்கு புறப்படுவதற்கு முன்பு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் ராகுல் பேசினார். அப்போது கட்சியை வலுப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். நாட்டு மக்களுக்காக உண்மையாக பாடுபடுமாறும் அவர் வலியுறுத்தினார். ராகுல் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தில் செய்யப்பட்டிருந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: