முக்கிய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. வெற்றி - பிரதமர் பாராட்டு

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
Manmohan-Singh 0

புதுடெல்லி, ஏப்.21 - பி.எஸ்.எல்.வி. ராக்கெட் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும், பொறியாளர்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் கூறிய அவர், பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. இதையறிந்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்துள்ள இந்த சாதனை மகத்தானது. இந்த நாட்டுக்கு இஸ்ரோ தொடர்ந்து அளப்பறிய சேவையை செய்துவருகிறது. மூன்று செயற்கை கோள்கள் இதன் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. செயற்கைகோள் வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்லாகும். இஸ்ரோ குடும்பத்திற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்காலத்தில் அவர்கள் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளும் வெற்றிபெற மனமார வாழ்த்துகிறேன். இவ்வாறு பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: