முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் சீல் அகற்ற நடவடிக்கை உத்தரவு

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, பிப்.8 - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் 3 கேலரிகளுக்கு சென்னை மாநகராட்சி வைத்த சீலை  அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்த விபரம் வருமாறு:-

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எ முதல் எச் வரையிலான பார்வையாளர்கள் கேலரி இயங்கி வந்தது. கடந்த 2010-ம் வருடத்திற்குப் பிறகு ஐ, ஜே, கே என்ற மூன்று கேலரிகள் கட்டப்பட்டது. இந்த மூன்று  கேலரிகளுக்கும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்காததை அடுத்து சென்னை மாநகராட்சி அந்த மூன்று கேலரிக்கும் சீல் வைத்தது. இந்த நடவடிக்கைகளை எதிர்த்து சமீபத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின்போதும், டி- 20 போட்டியின் போதும், இந்தியா- பாகிஸ்தான் ஆடிய ஒரு நாள் கிரிக்கெட் விளையாட்டின்போதும் நீதிமன்றத்தை நாடி, அந்த மூன்று கேலரியையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தற்காலிக உத்தரவு பெற்று அதற்கான டிக்கெட்டுகளை விற்று வந்தோம். இதற்கு நிரந்தர அனுமதி வழங்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், சீலை அகற்ற உத்தரவிடும்படி சென்னை மாநகராட்சிக்கும் இந்த நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எலிபி தர்மராவ் மற்றும் வேணுகோபால் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் வழங்கிய உத்தரவில் தெரிவித்துள்ளதாவது:-

சென்னை மாநகராட்சியால் மூன்று கேலரிகளுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதற்கு உரிய உத்தரவை மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அடுத்த ஒரு வாரத்திற்குள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரி புதிய மனு கொண்டுக்க வேண்டும். மேலும் அந்த மனுவை 6 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். 

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்