முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரென்கோ செஸ்: ஆனந்த் - ஆடம்ஸ் பலப்பரிட்சை

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

பேடன் பேடன், பிப். 8 - ஜெர்மனியில் நடக்க இருக்கும் கிரென் கோ செஸ் கிளாசிக் போட்டியில் உல க சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்து ம், இங்கிலாந்து வீரர் மைக்கேல் ஆட ம்சும் முதல் சுற்றில் மோத உள்ளனர். 

இந்தப் போட்டியில் முதல் நிலை வீர ராக கணிக்கப்பட்டு உள்ள விஸ்வநாத ன் ஆனந்த் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்பு உள்ளதாக தெரிய வருகிறது. 

இந்த கிரென்கோ செஸ் போட்டியில் பட்டத்தைக் கைப்பற்ற 6 முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் களம் இறங்குகி றனர். இந்தப் போட்டி டபுள் ரவுண்டு ராபின் முறையில் நடத்தப்படுகிறது. 

சமீபத்தில் நெதர்லாந்து நாட்டில் டா டா ஸ்டீல் சர்வதேச சதுரங்கப் போட்டி நடந்தது. இதில் இந்திய வீரர் ஆனந்த் சீன வீரர் வாங் ஹாவோவிடம் அதிர்ச் சி தோல்வி அடைந்தார். 

இதனால் அந்தப் போட்டியில் ஆனந்த் இறுதியில் 3 - வது இடத்தைப் பிடித்தா ர். எனவே இந்தப் போட்டியில் ஆனந்த் பட்டம் வெல்ல ஆர்வமாக இருக்கிறார். 

இந்தப் போட்டியில் 2-ம் நிலை வீரராக களம் இறங்கும் இத்தாலியைச் சேர்ந்த பேபியானோ கருவானா, இந்திய நட்சத்திர வீரரான ஆனந்திற்கு சவாலை அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து வீரர் ஆடம்ஸ் தவிர, ஜெர் மனியைச் சேர்ந்த டேனியல் பிரிட்மே ன், நைடிட்ச், ஜியார்க் மெய்யர் ஆகிய 3 வீரர்களும் இந்தப் போட்டியில் பங் கேற்க இருக்கின்றனர். 

கிரென்கோ செஸ் கிளாசிக் போட்டி யில் மொத்தம் 10 ரவுண்டுகள் நடக்க இருக்கிறது. இடையே 12-ம் தேதி  ஒரு நாள் மட்டும் ஓய்வு அளிக்கப்படுகிறது. 

கிளாசிகள் செஸ் போட்டியின் விதி முறைகளின் படி முதல் 40 நகர்த்தலுக் கான நேரம் 100 நிமிடமாகவும், அடுத்த 20 நகர்த்தலுக்கான நேரம் 50 நிமிடமாக வும், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தவிர, முதல் நகர்த்தலுக்குப் பின்பு இரு வீரர்க ளுக்கும் 15 நிமிட நேரமும், 30 வினாடி கள் அதிகரிப்பும் கொடுக்கப் பட்டுள்ளது. 40 நகர்த்தலுக்கு முன்பாக ஆட்டத்தை சமன் செய்ய முடியாது. 

இந்தப் போட்டியில் பங்கேற்கும் மூத்த வீரர் 43 வயதான ஆனந்த் ஆவார். இங் கிலாந்து வீரர் ஆடம்சிற்கு 41 வயதாகிறது. இதில் பங்கேற்கும் இத்தாலி வீரர் கருவானாமிக இளைஞராவார். அவரு க்கு 20 வயதே ஆகிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்கும் முன் னணி வீரர்களின் சராசரி ரேட்டிங் புள் ளிகள் 2714 ஆகும். பிடே அட்டவனைப் படி இந்தப் போட்டி கேட்டகிரி - 19 வகையிலானதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்