முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் கிரிக்கெட்: இங்கி.,-ஆஸ்தி., இன்று மோதல்

வியாழக்கிழமை, 7 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 8 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் சூப்பர் சிக்சில் இன்று மும்பையில் மோத உள்ளன. மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இந்தப் போட்டி மும்பை மற்றும் கட்டாக் நகரங்களில் நடந்து வருகிறது. 

இதில் கோப்பையைக் கைப்பற்ற 8 அணிகள் களம் இறங்கின. முன்னதாக லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 8 அணிகள் 2 பிரிவாக மோ தின. 

முதலில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்தி யா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தோல்விஅடைந்து வெளியேறின. கடைசி லீக்கில் இந்தியா இலங்கையி டம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இதனால் சூப்பர் சிக்ஸ் வாய்ப்பை இழந்தது. 

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மே.இ.தீவு, இலங்கை மற்றும் தெ.ஆ. ஆகிய 6 அணிகள் சூப்பர் சிக்சிற்கு முன்னேறின. 

மும்பையில் இன்று நடக்க இருக்கும் சூப்பர் - 6 ஆட்டம் ஒன்றில் நடப்பு சா ம்பியனான இங்கிலாந்தும், பரம எதிரி யான ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 

பலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோ தும் இந்த சூப்பர் -6 ஆட்டம் ரசிகர்களு க்கு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

3 முறை சாம்பியனான இங்கிலாந்து அணி முன்னதாக நடந்த லீக்கில் மே. இ.தீவு மற்றும் இந்திய அணிகளைத் தோற்கடித்தது. ஆனால் துவக்க ஆட்ட த்தில் இலங்கையிடம் அதிர்ச்சி தோல் வி அடைந்தது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்ட த்தில் தடுமாறிய போதிலும், லீக் போ  ட்டியில் தோற்கவே இல்லை. 

எனவே இன்று பிரபோர்ன் மைதானத் தில் நடக்க இருக்கும் சூப்பர் சிக்சில் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமை யாக போராட காத்திருக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்