முக்கிய செய்திகள்

சந்திரபாபு நாயுடு பிறந்தநாள் - ஜெயலலிதா வாழ்த்து

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      இந்தியா
chandrababu-naidu

 

சென்னை, ஏப்.21 - 62வது பிறந்தநாளை கொண்டாடும் சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான என்.சந்திரபாபு நாயுடுவின் 62-வது பிறந்தநாளான நேற்று, அவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

அப்போது, இறையருளால் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், எல்லா நலமும், வளமும் பெற்று பல்லாண்டுகள் வாழ்ந்து, பல வெற்றிகளை பெற்று நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவை ஆற்றிட வேண்டும் என்று ஜெயலலிதா மனதார வாழ்த்தினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: