முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் சூப்பர் சிக்சில் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி

சனிக்கிழமை, 9 பெப்ரவரி 2013      விளையாட்டு
Image Unavailable

 

மும்பை, பிப். 9 - உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நடைபெற்ற முதல் சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தில் ஆஸ் திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. 2 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து போராடி தோல்வி அடைந்தது. 

மகளிருக்கான உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியை இந்தியா நடத்தி வருகிறது. இந்தப் போட்டிகள் மும்பை மற்றும் கட்டாக் நகர்களில் நடைபெற் று வருகிறது. 

உலகக் கோப்பை போட்டியின் முதல் சூப்பர் - 6 ஆட்டம் மும்பையில் நடை பெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இங் கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிக ள் மோதின. 

குறைந்த ஸ்கோரைக் கொண்ட இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி எளி தாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க் கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. 

இந்த முதல் சூப்பர் -6 போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சிறப் பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடி த் தந்தனர். கடைசி ஓவரில் அந்த அணி வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 147 ரன்னில் ஆட்

டம் இழந்தது. பின்பு களம் இறங்கிய இங்கி. அணி 145 ரன்னில் அவுட்டா          னது. 

148 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்குடன் இங்கி. அணி ஆடியது. ஆனால் 10 ஓவரில் 39 ரன்னை எட்டுவதற்குள் இங்கி. அணியின் பாதி விக்கெட்டுகள் விழுந்தன. 

உலககக் கோப்பை போட்டியைப் பொறுத்த வரை ஆஸ்திரேலிய அணிக்கு இது மிகக் குறைந்த ஸ்கோராக இருந்த போதிலும், அதன் பெளலர்கள் சிறப் பாக பந்து வீசி அணிக்கு வெற்றி தேடி த் தந்தனர். 

முக்கியமாக ஆஸி. அணியின் வேகப் பந்து வீச்சு வீராங்கனைகளான ஜூலி ஹன்டர், மெகன் ஷுட், மற்றும் ஹோ லி பெர்லிங் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி தலா 2 விக்கெட் எடுத்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி 11 ஓவரு க்குள் 39 ரன்னிற்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது குறிப்பிடத்தக்கது. அதன் பின்பு பின்வரிசை வீராங்கனைக ள் சிறிது தாக்குப் பிடித்து ஆடியதால், அந்த அணி இலக்கை நெருங்கியது.

ஆட்டம் துவங்கிய அரை மணி நேரத்தி ற்குள் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. கேப்டன் சர்லோட் எட்வர்ட்ஸ் எல்.பி. டபிள்யு.வில் இருந்து தப்பிய போதிலு ம், சிறிது நேரத்தில் முதலாவது விக்கெ ட்டாக வீழ்ந்தார். இதனைத் தொடர்ந் து கீப்பர் சாரா டெய்லர், துவக்க வீராங்கனை டேனியல் வியாட், ஆல் ரவுண்டர் ஆரன் பிரிண்டில், ஹீதர் நை ட் மற்றும் ஜெனிபர் கன் ஆகியோரது விக்கெட்டுகள் சரிந்தன. 

பின்பு 7- வது விக்கெட்டிற்கு ஜோடி சே ர்ந்த லிடியா கிரீன்வே (49) மற்றும் லா ரா மார்ஷ் (22), ஆகியோர் நிலைத்து ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். 

இந்த ஜோடி 155 பந்தில் 55 ரன்னைச் சேர்த்து ஆட்டத்திற்கு உயிர் ஊட்டியது.  இந்நிலையில் மார்ஷ் எல். பி.டபிள்யு. வானார். அப்போது இங்கிலாந்திற்கு 81 பந்தில் 52 ரன் தேவைப் பட்டது. கை வசம் 2 விக்கெட்டுகள் இருந்தன. 

144 நிமிடம் களத்தில் இருந்த கிரீன்வே 113 பந்துகளைச் சந்தித்தார். ஆனால் அரை சத வாய்ப்பை இழந்தார். இறுதியில் ஸ்தாலேகரிடம் கேட்ச் கொடுத்து வெளியேனார். 

பின்பு கடைசி விக்கெட் ஜோடியும் சிறிது தாக்குப் பிடித்து ஆடி 31 ரன்னைச் சேர்த்தது. இதனால் ஆஸி. வீராங்க னைகள் பதட்டமடைந்தனர். இறுதியில் 2 ரன் குறைவாக இருந்த போது, இங் கி. ஆட்டம் இழந்தது. 

முன்னதாக முதலில் பேட்டிங் செய்த ஆஸி. அணியை இங்கிலாந்து வீராங்க னைகள் சிறப்பாக பந்து வீசி அவுட்டா க்கினர். அந்த அணி 44.4 ஓவரில் 147 ரன் னில் ஆட்டம் இழந்தது. 

ஆஸி. அணி தரப்பில் 6-வது விக்கெட்டி ற்கு ஜோடி சேர்ந்த லிசா ஸ்தாலேகர் (41), மற்றும் சாரா கொய்ட் (44) இருவ ரும் இணைந்து 82 ரன் சேர்த்தது சிறப்ப ம்சமாகும். இதனால் அந்த அணி 100 ரன்னைத் தாண்டியது. 

5 முறை சாம்பியனான ஆஸி. அணியி ன் முன்னணி வீராங்கனைகளான மெ கான் லன்னிங், ரேச்சல் ஹெய்ன்ஸ், ஜெய்சிகா கேமரூன், மற்றும் அலெக்சா  ண்டிரா பிளாக்வெல் ஆகியோர் 27 ரன் னிற்குள் சுருண்டது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து அணி தரப்பில், அன்யா ஸ்ரப்ஷோல், 24 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, கேத்தரின் பிரண்ட் மற்றும் ஆரான் பிரிண்டில் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்