முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையின் ரோந்து ஹெலிகாப்டர் தீடீர் தரையிறக்கம்

புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

ராமநாதபுரம் ஏப் 21 - இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென பழுது ஏற்பட்டது. விமானிகளின் சமயோஜித நடவடிக்கையால் வயல்வெளியில் தரையிறக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் வான்வழி ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். நேற்றும் வழக்கம்போல் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்திலிருந்து புறப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் தொண்டி கடற்பகுதியில் வானில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது திடீரென இயந்திர பழுது ஏற்பட்டது. தொடர்ந்து பறந்தால் வெடித்துசிதறி விபத்து ஏற்படும் நிலை உருவானது. அதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் இருந்த விமானியும் மற்ற 2 கடற்படை வீரர்களும் சமயோஜிதமாக முடிவுசெய்து ஹெலிகாப்டரை ஆட்கள் இல்லாத தரைப்பகுதியில் இறக்குவது என்று முடிவு செய்து உப்பூர் அருகே வயல்வெளியில் ஹெலிகாப்டரை பத்திரமாக 

இறக்கினர். திடீரென வயல்வெளியில் ஹெலிகாப்டர் இறங்கியதை கண்ட அந்த பகுதி மக்கள் அங்கு கூடினர். பின்னர் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை விமான தளத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர். 

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட திடீர் கோளாரை தொடர்ந்து எடுத்த சமயோஜித முடிவால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்